2018-07-11 15:31:00

இமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்


மிகச்சிறிய வயதில் புத்தகம் எழுதி இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியராக மும்பையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் சாதனைப் படைத்துள்ளான். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அயான் கபாடியா என்ற ஒன்பது வயது சிறுவன் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். சிறு வயது முதலே அவனுக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால் சிறு கதைகள் எழுதத் தொடங்கினான். அவன் எழுதிய கதைகளை அவனின் பெற்றோர் புத்தகமாக வெளியிட்டனர். இது மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் அயானின் பெயர் இடம்பெற்றுள்ளது. மிகச்சிறு வயதில் புத்தகம் எழுதிய மாணவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும், மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட புத்தகம் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கற்பனை கதை புத்தகத்தை 3 நாட்களில் எழுதியுள்ளார். அயானுக்கு இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் என்பதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.

அதேவேளை, 11 வயது நிரம்பிய இலட்சி பிரஜாபதி என்ற மாணவி, தனது ஒன்பது வயதிலேயே 'sit a while with me' என்ற புத்தகத்தை எழுதி, இளம் இலக்கியவாதி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.