2018-07-05 15:56:00

ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை மறுத்த பசுமைத் தீர்ப்பாயம்


ஜூலை,05,2018. சுற்றுச்சூழல் சீர்கேட்டை உண்டாக்கியதாகக் கூறி, தூத்துக்குடியில் உள்ள ‘ஸ்டெர்லைட்’ தாமிர உருக்காலையை தமிழக அரசு மூடி, ‘சீல்’ வைத்ததை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை புது தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக்கு ஏற்றது.

ஆனால், ஆலையைப் பராமரிக்க அனுமதிக்கும் வகையில் தங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்ற ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை தீர்ப்பாயம் ஏற்கவில்லை.

தமிழக அரசு முன்னறிவிப்பு எதுவுமின்றி ஆலையை மூடியுள்ளதாகவும், மின் இணைப்பைத் துண்டித்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர், அதன் காரணமாக ஆலையைப் பராமரிக்க முடியவில்லை என்று கூறினார்.

"எனவே, ஆலையைப் பராமரிக்க மட்டும் இடைக்கால அனுமதி வழங்க உத்தரவிடவேண்டும்," என்று ஸ்டெர்லைட் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்க தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

இவ்வழக்கின் தொடர்பான அடுத்த விசாரணை, ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.