2018-06-29 14:06:00

இமயமாகும் இளமை ............: 2030ம் ஆண்டின் செவ்வாய்ப் பெண்!


“அப்பா! நான் செவ்வாய்க்குப் போக வேண்டும்” என்று அலீஸா கார்சன் சொன்னபோது, அவருக்கு வயது 3. இந்த ஆர்வம், அவரை, நாசாவின் மூன்று விண்வெளிப் பயிற்சி முகாம்களில் பங்கேற்க வைத்தது. கடினமான ‘அட்வான்ஸ்டு ஸ்பேஸ் அகாடமி’ பயிற்சியை முடிக்க வைத்தது. 14 விண்வெளி மையங்களைப் பார்வையிடவும் வைத்தது. இப்போது 17 வயதாகும் அலீஸாவுக்கு விண்வெளி தொடர்பான எல்லா விடயங்களும் அத்துப்படி. அமெரிக்காவின் லுயிசியானாவைச் சேர்ந்த அவர், தற்போது வளிமண்டலம் குறித்த முக்கிய ஆய்வை மேற்கொள்ளத் தேர்வு செய்யப்பட்டு, அதில் ஈடுபட்டுள்ளார். அதோடு, 2030-ம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்துக்கு செல்லும் முதல் மனிதர் என்ற பெருமையையும் பெறப்போகிறார் அலீஸா. அதற்காக இப்போதிருந்தே ஆக்ஸிஜன் குறைவான இடத்தில் மூச்சுவிடுவதற்கான பயிற்சி, ஸ்கூபா டைவிங் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார், விண்வெளி வீராங்கனை அலீஸா.

ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.