2018-06-27 15:30:00

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்


ஜூன் 27,2018. வட மற்றும் தென் கொரிய நாடுகளில் வாழ்வோர் முழுமையான அமைதியையும், முழு மனித வாழ்வையும் அனுபவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சோல் பேராயர் கர்தினால் அந்திரேயா யோம் சூ-ஜுங் அவர்கள் தலைமையில் ஓர் அமைதி ஊர்வலமும், செப வழிபாடும் மேற்கொள்ளப்பட்டன.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பை மேற்கொள்வதற்குத் தேவையான அரசு சார் சந்திப்புக்கள் நிகழ்ந்தாலும், அமைதியை நோக்கிய பயணம் இன்னும் தொடரவேண்டியுள்ளது என்று கர்தினால் யோம் சூ-ஜுங் அவர்கள் கூறினார்.

68 ஆண்டுகளுக்கு முன், ஜூன் 25ம் தேதி இரு கொரிய நாடுகளுக்கிடையே உருவான மோதலை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் கொரிய ஆயர் பேரவை 1965ம் ஆண்டு முதல் இந்த அமைதி ஊர்வலத்தையும் செப வழிபாட்டையும் மேற்கொண்டு வருகின்றது.

கொரியா மற்றும் மங்கோலியா நாடுகளில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் Alfred Xuereb அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று உரை வழங்கியபோது, கொரிய தீபகற்பம் திருத்தந்தையின் உள்ளத்தில் எப்போதும் இடம் பெற்றுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.