2018-06-27 14:54:00

இமயமாகும் இளமை.........: வருங்கால தலைமுறைக்கே அனைத்தும்


முதல்வராக இருந்தபோது, பெருந்தலைவர் காமராசர் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்திருக்கிறார்கள். நிறையத் துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தொண்டர், இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராசர் என்ன செய்யப் போகிறார், நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார் என்று எண்ணி, ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்காக வைத்துக்கொண்டிருக்கிறார். கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தவுடன் அந்த தொண்டரைக் காமராசர் அழைத்து, “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றாராம். அந்தத் தொண்டர், ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவில் வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே என மனம் வருந்தியிருக்கிறார். அதற்கு தலைவரோ, “தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்தத் துண்டை நாம் தொடக்கூடாது. ஏன்னா, இதெல்லாம் சென்னையில் இருக்கிற பாலமந்திர் ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்க வேண்டியது. ஏழைகளுக்கு உதவுவதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்று சொல்லியிருக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.