2018-06-26 16:15:00

முஸ்லிம் குரு கத்தோலிக்கப் பேராலயத்தில் இலவச சிகிச்சை


ஜூன்,26,2018. பாகிஸ்தானில் முஸ்லிம் குரு ஒருவர், லாகூர் இயேசுவின் திருஇதய கத்தோலிக்கப் பேராலய வளாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்களுக்கு, இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார் என யூக்கா செய்தி கூறுகின்றது.

பாகிஸ்தானில் சமய சகிப்பற்றதன்மைக்கு இட்டுச்செல்லும் தவறான புரிதல்களைத் தவிர்க்கும் நோக்கத்தில், லாகூரில், முஸ்லிம் குரு Qari Abdul Qayyum Zaheer அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்சமய மருத்துவ இலவச முகாமில், அவரோடு சேர்ந்து மேலும் நான்கு மருத்துவர்கள் கத்தோலிக்கர்களுக்கு, இலவசமாக சிகிச்சை அளித்தனர்.  

ஜூன் 24, கடந்த சனிக்கிழமையன்று கத்தோலிக்கப் பேராலய வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில், கடும் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் உடல்நலம் பாதிக்கப்படுவது பற்றிய விழிப்புணர்வு அமர்வுகளும் நடைபெற்றுள்ளன.

கடந்த ஏப்ரலில், பாகிஸ்தானின் சிந்து பகுதியில் வெப்பநிலை 50.2 செல்சியுசாக இருந்தது. இந்த வெப்பக்காற்றால், கராச்சியில் 65 பேர் இறந்தனர் என செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.