2018-06-20 15:38:00

புனித பூமியில் திருஅவையின் சொத்துக்களை அபகரிக்கும் திட்டம்


ஜூன்,20,2018. இஸ்ரேல் நாட்டில் திருஅவை சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட சட்ட முன்வரைவு, இதுவரை தடைசெய்யப்பட்டவில்லை என்ற கவலையை வெளியிட்டுள்ளனர், புனித பூமியின் கிறிஸ்தவத் தலைவர்கள்.

அரசுத்தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த சட்ட முன்வரைவு, புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான திட்டமிட்ட மற்றும் திடீர் தாக்குதலாக உள்ளது என்றும், மிகவும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும், புனித பூமியின் மூன்று முக்கிய கிறிஸ்தவ தலைவர்கள் கூறியுள்ளனர்.

இஸ்ரேல் யூத நாட்டிற்கும், உள்ளூர் கிறிஸ்தவ சமூகங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவிவரும் உறவுகளைப் பாதிப்பதாகவும் இந்த நடவடிக்கை உள்ளது என்றுரைத்துள்ள தலைவர்கள், இந்த சட்ட முன்வரைவை தடைசெய்வதற்கு உடனடியாகச் செயல்படுமாறு, இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu அவர்களுக்குப கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

புனித பூமியின் அறங்காவலரான பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணி Francesco Patton, எருசலேம் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை 3ம் Theophilos, எருசலேம் அப்போஸ்தலிக்க முதுபெரும்தந்தை Nurhan Manougian ஆகிய மூவரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.  

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.