2018-06-16 15:04:00

இமயமாகும் இளமை – இயற்கையை மேலும் உடைக்காமல் விடுங்கள்


முதல் பூமிக்கோள உச்சி மாநாடு 1992ம் ஆண்டு ரியோவில் நடைபெற்றபோது, செவர்ன் கல்லிஸ் சுசுகி (Severn Cullis Suzuki) என்ற 12 வயது சிறுமி, உலகத் தலைவர்களிடம் 6 நிமிடங்கள் பேசினார். அச்சிறுமியின் சொற்கள், உலகத் தலைவர்களின் உள்ளங்களில் அம்புகளாய் பாய்ந்தன. அன்று, அச்சிறுமி சொன்ன கசப்பான உண்மைகள், இன்றும் இவ்வுலகில் நம்மை வாட்டியெடுக்கும் கேள்விகளாக ஒலிக்கின்றன. சிறுமி செவர்ன் சுசுகி சொன்ன ஒரு சில உண்மைகளுக்கு மீண்டும் செவி மடுப்போம்:

“நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப்பட்டீர்களா? நான் வாழும் இந்த உலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும் என்று கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.

இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.

காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.

உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.”

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.