2018-05-17 15:17:00

நேர்காணல் – Veritatis gaudium திருத்தூது கொள்கை விளக்கம்


மே,17,2018. உலகில், திருத்தந்தையின் அதிகாரத்தின்கீழ் செயல்படும் திருஅவை பல்கலைக்கழகங்கள், இயேசுவையும், அவரது இறையாட்சியையும், எவ்வாறு உண்மையில் மகிழ்வோடு உலகுக்குப் பறைசாற்ற வேண்டும் என்பது பற்றிய Veritatis gaudium என்ற திருத்தூது கொள்கை விளக்கத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த சனவரியில் வெளியிட்டார். இயேசு சபை அருள்பணி முனைவர் பவுல் ராஜ் அவர்கள், அந்த ஏடு பற்றி நமக்கு விளக்கியதை இன்று கேட்போம். அருள்பணி முனைவர் பவுல் ராஜ் அவர்கள், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். உண்மையில் வெளிப்படும் மகிழ்ச்சி எனப்படும் இந்த திருத்தூது கொள்கை ஏடு, இரு பாகங்களைக் கொண்டதாகவும், முடிவில் ஒரு பிற்சேர்க்கையோடுகூடிய அழகோடு தெளிவு கலந்த அமிர்தமாக, உலகிற்கும், திருஅவைக்கும் வழங்கப்பட்டுள்ளது எனச் சொல்கிறார், இயேசு சபை அருள்பணி முனைவர் பவுல்ராஜ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.