2018-05-08 15:55:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு வட கொரியாவில் சுற்றுப்பயணம்


மே,08,2018. இரு கொரிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கிடையே இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, அண்மையில் (ஏப்ரல் 27) இடம்பெற்றுள்ளவேளை, வட கொரிய கிறிஸ்தவ கூட்டமைப்பின் (KCF) அழைப்பின்பேரில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று வட கொரியா சென்று திரும்பியுள்ளது.

மே 3ம் தேதி முதல், மே 7, இத்திங்கள் வரை, இப்பிரதிநிதிகள் குழு, வட கொரியாவின் Pyongyang நகருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் (WCC) பொதுச் செயலர் டாக்டர் Olav Fykse Tveit, அதன் பிரதிநிதிகள், உலக சீர்திருத்த சபைகள் குழுமத்தின் (WCRC) பொதுச் செயலர் டாக்டர் Chris Ferguson, அதன் பிரதிநிதிகள் என, ஆறு பேர் கொண்ட குழு, வட கொரியா சென்று திரும்பியுள்ளது.

பிளவுபட்டுள்ள இரு கொரிய மக்களிடையே உரையாடலை ஊக்குவித்து, அமைதியான நல்லணக்க மற்றும் ஒன்றிப்பு வாழ்வை வளர்ப்பதற்கு, உலகளாவிய கிறிஸ்தவ ஒன்றிப்பு  அமைப்பு, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக, 1984ம் ஆண்டில் நடத்தப்பட்ட Tozanso கலந்தாய்வு கூட்டத்திற்குப் பின்னர், தன் பணியை தீவிரப்படுத்தியிருப்பது குறிப்படத்தக்கது. .

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.