2018-05-04 15:22:00

இமயமாகும் இளமை .......: பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு


இளைஞன் ஒருவன் கொடிய குற்றம் செய்ததற்காக, மரணத்தண்டனை விதிக்கப்பட்டான். தான் இந்த நிலைக்குக் காரணமாக இருந்த சமூகத்தை, உறவுகளை, நண்பர்களை, ஏன் தன்னுடைய தாயைக்கூட முற்றிலுமாக வெறுத்தான் அவன். தன்னுடைய மகனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, அவனுடைய தாய் அவனைப் பார்ப்பதற்காக சிறைக்கூடம் நோக்கி  ஓடோடி வந்தார். அப்போது சிறை அதிகாரி அவரைத் தடுத்து நிறுத்தி, “அம்மா! உம்முடைய மகன் இப்போது யாரையும்,  பார்க்க விரும்பவில்லை” என்றார். அதற்கு அந்தத் தாய் அவரிடம், “அது ஏன்?” என்று கேட்டதற்கு அவர், “உங்கள் அனைவரையும் அவன் முற்றிலுமாக வெறுக்கிறான். அவனுக்கு இப்போது யாரையுமே பிடிக்கவில்லை” என்றார். அதற்கு அந்தத் தாய், “அவன் என்னை வெறுத்தால் என்ன!, நான் அவனை முழுவதும் அன்பு செய்கிறேன்” என்றார். மரணதண்டனைக் கைதியான அந்த இளைஞன்மீது தாயானவள் எந்தளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் என்பதை அந்த சிறைஅதிகாரி அப்போது உணர்ந்துகொண்டார். எந்த நிலையிலும் ஒரு தாய் தன் குழந்தையை அன்புகூர்வார் என்பது மீணடும் அங்கு நிரூபிக்கப்பட்டது.

மே மாதம், மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.