2018-04-30 15:23:00

அரியவகை நோய்கள் குறித்த ஆய்வுக்கு உதவும் இயக்கத்திற்கு..


ஏப்.30,2018. அரியவகை நோய்கள் குறித்த அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும் 'அரிய ஓர் வாழ்வு' என்ற இயக்கத்தின் அங்கத்தினர்களை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்டோருடன் ஒருமைப்பாட்டை அறிவித்து, அந்நோய்கள் குறித்த அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும் மக்களை சந்திப்பதில், தான் பெருமகிழ்ச்சியடைவதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அரியதோர் வாழ்வு' என்று இவ்வியக்கம் தேர்ந்துள்ள பெயரே, நம்பிக்கையைத் தருவதாக உள்ளது என்று கூறினார்.

துன்பம் நிறைந்த வேளைகளிலும் நம்பிக்கையைத் தருவதாக உள்ள இந்த இயக்கம், இருளின் மத்தியில் ஒரு தீபமாக விளங்குகிறது என்றார் திருத்தந்தை.

அரியவகை நோய் குறித்த அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும் நோக்கத்திலும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும், வாழ்வு மற்றும் நம்பிக்கையின் ஓட்டப்பந்தயம், என்ற பெயரில் உரோம் நோக்கி 700 கிலோ மீட்ட்டர் 10 நாள் ஓட்டப்பந்தயத்தை இந்த இயக்கம் நடத்தியது குறித்தும் தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.