2018-04-25 16:26:00

கொடுங்கோலனைப் போல் நடந்துகொள்ளும் மருத்துவமனை


ஏப்.25,2018. ஆல்டர் ஹே மருத்துவமனை, ஒரு கொடுங்கோலனைப் போல் நடந்து கொள்வது உடனடியாக நிறுத்தப்படவேண்டும், குழந்தை ஆல்பியை இம்முறையில் கொல்வதை நிறுத்தி, அவனை இத்தாலிக்கு அனுப்ப அனுமதி வழங்கவேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

The Medical Ethics Alliance என்ற பெயரில், பல நாட்டு மருத்துவர்கள் அடங்கிய குழு, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், குழந்தை ஆல்பிக்கும், அவனது பெற்றோருக்கும் இழைக்கபப்டும் அநீதிகளை கண்டனம் செய்துள்ளது.

திருத்தந்தை அளித்துள்ள விண்ணப்பம், இத்தாலிய அரசு, இத்தாலிய மருத்துவமனைகள் இணைந்து அளித்துள்ள சம்மதங்கள் அனைத்தையும் மீறி, ஆல்டர் ஹே மருத்துவமனையும், பிரித்தானிய நீதி மன்றங்களும் ஆல்பி ஈவான்ஸுக்கு அனுமதி மறுப்பது, மருத்துவ துறைக்கு பெரும் இழுக்காக அமைந்துள்ளது என்று இம்மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.

பிரித்தானியாவின் உயர்மட்ட மருத்துவக் கழகமான GMC (General Medical Council), இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, குழந்தை ஆல்பி ஈவான்ஸ் இத்தாலிக்குச் செல்வதற்குத் தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கவேண்டும் என்று மருத்துவர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.