2018-04-19 15:38:00

வறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை


ஏப்.19,2018. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மிக விரைவாக வளர்ந்துவரும் இவ்வுலகில், முன்னேற்றம் அடைந்து வரும் வறிய நாடுகள், புதிய தொழிநுட்பங்களைப் பெறுவது மிகவும் முக்கியம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.அவைக் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பாகப் பங்கேற்றுவரும் பேராயர் ஈவான் யூர்கோவிச் அவர்கள், ஏப்ரல் 18, நடைபெற்ற பன்னாட்டு கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

கணணி வழி வர்த்தகம், பல கருத்துக்களைத் திணித்து வரும் வேளையில், அந்த வர்த்தகத்தில் இணையமுடியாத வறுமைப்பட்ட நாடுகள், தங்கள் கருத்துக்களைக் கூற வழியின்றி, தங்கள் மீது திணிக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கும் ஆபத்திற்கு உள்ளாகின்றன என்று பேராயர் யூர்கோவிச் அவர்கள் கூறினார்.

டிஜிட்டல் தொழிநுட்பம், கல்வி உலகில், பெரும் தாக்கங்களை உருவாக்கிவரும் இவ்வேளையில், வறுமைப்பட்ட நாடுகளில் உள்ள இளையோர், இந்த வசதிகளை அடைவது மிக முக்கியம் என்று, பேராயர் யூர்கோவிச் அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.