2018-04-18 14:40:00

"கிறிஸ்தவ அழைப்பின் பொருள்" - திருத்தந்தையின் டுவிட்டர்


ஏப்.18,2018. "ஒவ்வொருவருக்கும், சிறப்பாக, வறுமையில் இருப்போருக்கும், பகைவராய் இருப்போருக்கும், ஒரு சகோதரராக, சகோதரியாக இருப்பதே, கிறிஸ்தவ அழைப்பின் பொருள்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியாயின.

மேலும், இத்தாலியின் அபானோ தெர்மே (Abano Terme) எனும் ஊரில், நடைபெற்றுவரும் இத்தாலிய காரித்தாஸ் மாநாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் பிரான்செஸ்கோ மோந்தெநீக்ரோ அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

"இளையோர் என்றால், பகிர்ந்துவாழும் ஒரு குழுமம்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த மாநாடு, இளையோரின் தலைசிறந்த ஒரு பண்பை பறைசாற்றுகிறது என்று இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

பதுவை மறைமாவட்டத்தால் அபானோ தெர்மே என்ற ஊரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, ஏப்ரல் 16 இத்திங்கள் முதல், 19 இவ்வியாழன் முடிய நடைபெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.