2018-04-13 15:00:00

இமயமாகும் இளமை..: இலங்கை மாணவர் ஹெலிகாப்டர் தயாரித்து சாதனை


இலங்கையின் திம்புலாகல, அரலங்வில விலயாய மத்திய மகா பள்ளியில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், நான்கு பேர் பயணிக்கக்கூடிய வான் ஊர்தி ஒன்றை தயாரித்துள்ளார். உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்கும் ஹிரத்த பிரசாத் என்ற மாணவரே இவ்வாறு ஹெலிகாப்டரை தயாரித்துள்ளார். கல்விக்கூடத்தில் இடம்பெற்ற தொழில்நுட்ப கண்காட்சிக்காக அவர் அந்த ஹெலிகாப்டரை தயாரித்து சமர்ப்பித்துள்ளார். தயாரிப்புக்காக தகடு, இரும்பு, தையல் இயந்திரங்களின் பகுதிகள், கண்ணிப் பகுதிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதை உருவாக்க, ஏறத்தாழ மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும், மாணவர் ஹிரத்த பிரசாத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்த மாணவர் இதற்கு முன்னர் பல புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார். தான் தயாரித்த ஹெலிகொப்டரை வானில் செலுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அரசுக்கு இவர் விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.