2018-04-11 14:40:00

புனிதத்துவம் குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்


ஏப்.11,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய, ‘மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்’ (‘Gaudete et Exsultate’) என்ற திருத்தூது அறிவுரை மடல், ஏப்ரல் 9, இத்திங்களன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இருநாள்களாக இம்மடலில் கூறப்பட்டுள்ள புனிதத்துவம் குறித்த எண்ணங்களை, தன் டுவிட்டர் செய்தியாக அவர் வெளியிட்டு வருகிறார்.

ஏப்ரல் 11, இப்புதனன்று, பிற்பகல் ஒரு மணிக்கு வெளியான டுவிட்டர் செய்தியில், "'மகிழ்வான' அல்லது 'பேறுபெற்ற' என்ற சொல், 'புனிதமான' என்ற சொல்லின் பொருளுக்கு இணையானது, ஏனெனில், இறைவனுக்குப் பிரமாணிக்கமாக இருப்போர், தங்களையே வழங்குவதால், உண்மையான மகிழ்வை பெறுகின்றனர்" என்ற சொற்களை, திருத்தந்தை பதிவு செய்துள்ளார்.

அதேவண்ணம், இப்புதன் பிற்பகல் மூன்று மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "அனைவரையும் ஈர்க்கக்கூடிய திருஅவையின் முகமாக இருப்பது புனிதத்துவம்" என்ற சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.