2018-04-09 16:40:00

கலந்துரையாடல் ஒன்றே அமைதி நோக்கி இட்டுச் செல்லும்


ஏப்.09,2018. சிரியாவின் Douma நகரில் அரசுப்படைகளின் குண்டுவீச்சால், எண்ணற்ற பெண்களும் குழந்தைகளும் பலியாகியுள்ளது, மற்றும், பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, தன் ஆழ்ந்த கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டு துன்புறும்  குடும்பங்களுக்காகவும் செபிப்போம் என்ற அழைப்பை தன் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில்  நல்ல போர் என்றோ, கெட்ட போர் என்றோ எதுவும் இல்லை, ஆயுதம் தாங்காத அப்பாவி மக்களுக்கு எதிராக அழிவுதரும் ஆயுதங்களை பயன்படுத்துவதை நியாயப்படுத்த எதனாலும் முடியாது எனவும் கூறினார்.

சிரியா அரசுத் துருப்புக்கள், வேதியல் ஆயுதங்களைப் பயன்படுத்தின என்ற செய்திகளைத் தொடர்ந்து, இத்தகைய கணடனத்தை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரணத்தையும், அழிவையும் தராத அமைதியை நோக்கி இட்டுச் செல்லும் ஒரே வழியான கலந்துரையாடலை, அரசியல், மற்றும், இராணுவத் தலைவர்கள் தேர்ந்துகொள்ளவேண்டும் என, இறைவனை நோக்கி வேண்டுவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.