2018-04-06 14:52:00

பிரான்சின் de Chaponayக்கு திருத்தந்தை பாராட்டு


ஏப்.06,2018. இலத்தீன் அமெரிக்காவின்  கல்வியின் வளர்ச்சிக்காகச் சேவையாற்றிவரும்  Henryane de Chaponay அவர்களையும், அவர்களுடன் சென்ற ஒன்பது பேரையும், இவ்வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதி, மனித உரிமைகள், நம் பூமியின் பாதுகாப்பு, மனிதமும், உடன்பிறப்பு உணர்வுமுள்ள சமுதாய வளர்ச்சி ஆகியவற்றுக்காக, de Chaponay அவர்கள் ஆதரவு வழங்கி, சேவையாற்றி வருவதையும் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுக்காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மனித சமுதாயத்தில் அயராது உரையாடல்களை நடத்தி, சிறந்த கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கு, de Chaponay அவர்கள் பணியாற்றி வருவதையும் திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.

Henryane de Chaponay அவர்கள், பாரிசில், இலத்தீன் அமெரிக்காவின் கல்வி வளர்ச்சிக்காகச் d’Étude du développement en Amérique latine (CEDAL) என்ற அமைப்பை உருவாக்கி, சேவையாற்றி வருகிறார்.

மேலும், இறைவார்த்தை, இருளில் சுடர்விடுவதாகும். இது, நம் இன்னல்களை அச்சமின்றி எதிர்கொள்ள நமக்கு உதவுகின்றது என்ற செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.