2018-03-23 14:34:00

இமயமாகும் இளமை: இயற்கையை நேசிக்கும் இந்திய இளைஞர்


டொயோடா கார் நிறுவனத்தில் பொறியாளராக மிக அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்த இந்தியாவை சேர்ந்த Shubhendu Sharma என்பவர், மரம் வளர்ப்பு, காடுகள் உருவாக்குதல் போன்றவற்றுக்காக தன் வேலையையே உதறி தள்ளியுள்ளார். இதுவரை ஈராக், பாகிஸ்தான் உட்பட 6 நாடுகளில் உள்ள 28 நகரங்களில் 85க்கும் மேற்பட்ட காடுகளை Shubhendu உருவாக்கியுள்ளார்! இது பற்றி கூறுகையில், ‘எனக்கு சிறு வயதிலிருந்தே இயற்கை மீது பிரியம் அதிகம். நான் வேலை செய்த நிறுவனத்தின் சுற்றுப்புறங்களில் மரங்கள் நடுவதற்கு Akira Miyawaki என்னும் தாவரவியல் பட்ட படிப்பாளர் தன் குழுவுடன் வந்தார். நானும் இது போல மரங்கள் நட்டு உலகை என்னால் முடிந்தவரை செழிப்பாக மாற்றவேண்டும் என அவரிடன் கூறினேன், அதற்கு அவர் உதவினார். Miyawaki தொழில்நுட்பம் என்னும் முறையை அவர் சொல்லித் தந்தார். அதாவது, பல்வேறு வகையான செடிகளை, அந்த மண்ணின் தரம் அறிந்து, ஒரு சிறிய இடத்தில், அருகருகே நடுவது தான் அந்த நுட்பமாகும். இம்முறையைப் பின்பற்றி, செடிகள் நடும் பணியை முதன் முதலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆரம்பித்தேன். பின்னர் பல மாநிலங்களிலும், நாடுகளிலும், என் மரம் நடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தரிசு நிலங்கள் அனைத்தும் பசுமையாக மாறும் வரை என் பணி தொடரும்’ என்கிறார் Shubhendu, நம்பிக்கையுடன்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.