2018-03-16 15:06:00

இமயமாகும் இளமை : மின்கழிவுகளை பொதுக் குப்பைகளில் போடாதீர்கள்


மும்பையின் புறநகர் பகுதியில் குப்பை கொட்டும் இடத்தில், 2015ம் ஆண்டு ஒரு நாள் தீப்பிடித்து எழுந்த பெரும்புகையால், நிஷாந்த் ஜெயின் என்ற 15 வயது மாணவருக்கு நுரையீரல் காய்ச்சல் ஏற்பட்டு துன்புற்றார். மின்கழிவுகளின் நச்சுப்புகையே இதற்கு காரணம். இத்தகைய ஒரு நிலை ஏனைய சிறாருக்கும் ஏற்படக்கூடாது என்பதை மனதில்கொண்டு, குப்பைகளில் கிடக்கும் மின்கழிவுகளை எடுத்துப் பிரிக்க ஆரம்பித்தார். தன்னோடு சில நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு, அண்மையில் உள்ள பள்ளிகளுக்கு மாலை வேளைகளில் சென்று, பழைய பேட்டரிகள் உட்பட, மின்கழிவுகளை ஏனையக் குப்பைகளுடன் போடக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறினார். மின்கழிவுகளை சேகரித்ததுடன் நின்றுவிடாமல், அவற்றை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு, அவர்கள் வந்து அந்த மின்கழிவுகளை எடுத்துப்போக வைத்தார். தற்போது 30 பள்ளிகளின் மாணவர்கள், நிஷாந்த் துவங்கிய இப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர். மின் கழிவுகளால் சிறார்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து இந்திய பிரதமருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார், மாணவர் நிஷாந்த் ஜெயின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.