2018-03-15 15:20:00

புலம்பெயர்ந்தோர் மற்றும் நோயுற்றோரை சந்தித்த திருத்தந்தை


மார்ச்,15,2018. "மனிதகுலத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு, தீமையை விலக்குவது மட்டும் போதாது. பொதுவான நன்மையை, நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியிட்டார்.

மேலும், சான் எஜிதியோ குழுமத்தால் பராமரிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றும் நோயுற்றோர் சிலரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 13, இச்செவ்வாய் பிற்பகலில், சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்துப் பேசினார் என்று இக்குழுமத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆப்ரிக்காவின் நம்பிக்கை முனை, மற்றும் சிரியாவிலிருந்து இத்தாலிக்கு வந்து சேர்ந்துள்ள புலம் பெயர்ந்தோர், இத்தாலியில் தஞ்சம் புகுவதற்குமுன் தாங்கள் அடைந்த துன்பங்களை திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர் என்று சான் எஜிதியோ குழுமத்தினர் கூறினர்.

லெஸ்போஸ் தீவில் தான் சந்தித்த புலம்பெயர்ந்தோரைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, மனிதர்களை வரவேற்கும் உள்ளம் கொண்ட நாடுகள் உலகில் பெருகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.