2018-03-12 16:02:00

ஒன்றிணைந்த முன்னேற்றத்திற்காக உழைக்க அழைப்பு


மார்ச்,12,2018. மக்களின் ஒன்றிணைந்த முன்னேற்றத்தை மனதில் கொண்டவர்களாக மனிதாபிமான, சமூக, பொருளாதர, கலாச்சார மற்றும் மதஅளவிலும் உதவும் நோக்கில் அரசியல் கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்ஸ் நாட்டின் Marsiglia பகுதியின் பாராளுமன்ற அங்கத்தினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அடங்கிய குழுவை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசியலில் ஈடுபட்டிருப்போர் தங்கள் கடமைகளை ஆற்றும்போது, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றின் மதிப்பீடுகளை தங்கள் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும், கலாச்சாரம், ஒருவருக்கொருவர் சந்திப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில்,  அனைத்து மதத்தினரோடும் இணைந்து கிறிஸ்தவர்கள் உழைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

பொதுநலனில் ஆர்வம் கொண்டு நாம் உழைக்கும்போது, பல்வேறு மக்களிடையேயும் தலைமுறைகளுக்கிடையேயும் நாம் பாலங்களைக் கட்டியெழுப்புகிறோம் எனவும் கூறினார் திருத்தந்தை.

போர், ஏழ்மை, வன்முறை ஆகையவைகளின் காரணமாக, தங்கள் நாடுகளிலிருந்து வெளியேறி, பிரான்ஸ் நாட்டிற்குள் குடிபெயர்ந்துள்ள மக்களை வரவேற்று, அவர்களின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு உதவி, அவர்களை சமூகத்தில் ஒருங்கிணைக்க உதவ வேண்டும் எனவும், இத்திங்களன்று தான் சந்தித்த, பிரான்சின் Marsiglia பகுதி அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.