2018-03-10 15:03:00

செபத்திற்கு அதிக நேரம் ஒதுக்குவதற்கு திருத்தந்தை அழைப்பு


மார்ச்,10,2018. “நாம் செபத்தில் அதிக நேரம் செலவழித்தால், நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்ளும் பொய்களை நம் இதயங்கள் வெளிப்படுத்தும் மற்றும், கடவுளில் உண்மையான ஆறுதலை நாம் கண்டுகொள்வோம்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியானது.

மேலும், ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்’ எனப்படும் ஒப்புரவு அருளடையாள நிகழ்வு நடைபெற்ற இவ்வெள்ளிக்கிழமை, வேலை நாளாக இருந்தாலும்கூட, சீனக் கத்தோலிக்கர், திருத்தந்தையோடும், உலகளாவியத் திருஅவையோடும் இணைந்து இந்நாளைக் கடைப்பிடித்தனர் என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது.

ஜுயு ஜியாங் நகரிலுள்ள மூவொரு இறைவன் பங்குத்தள ஆலயத்தில்,  இவ்வெள்ளிக்கிழமை காலையில் திருப்பலியில் கலந்துகொண்டது முதல் மாலையில் சிலுவைப்பாதை பக்திமுயற்சி வரை, பெருந்திரளான விசுவாசிகள், நாள் முழுவதும் ஆலயத்தில் செபம் செய்தனர் என்று அச்செய்தி கூறுகின்றது

ஆண்டவரே, உம்மில் மன்னிப்பு உள்ளது, உமது தியாகம் இன்றி, நாங்கள் தீமையின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கு வழியில்லை போன்ற திருப்பாடல் வாசகங்களை விசுவாசிகள் தியானிப்பதற்கு, பங்குத்தந்தை Pang Rui அவர்கள் உதவினார் என்றும் பீதேஸ் செய்தி கூறுகின்றது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.