2018-03-03 13:10:00

இமயமாகும் இளமை - வர்த்தகக் கோட்டையைத் தகர்த்த இளைஞன்


பாஸ்கா விழா காலத்தில், எருசலேம் கோவிலுக்கு ஒரு இலட்சம் பக்தர்களாகிலும் வந்தனர் என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. அந்த ஒரு இலட்சம் பேருக்குத் தேவையான ஆடு, மாடு, புறா என்ற காணிக்கைகள், கோவிலில் குவிந்திருக்க வேண்டும். தனியொரு மனிதராய், இந்த வியாபாரக் கோட்டையைத் தகர்க்கத் துணிந்தார், ஓர் இளைஞன். அவர்தான் 33 வயது நிறைந்த இயேசு. இறைமகன் இயேசு, எருசலேம் கோவிலில் செய்த அந்தப் புரட்சியை நாம் ஒரு புதுமையாகவே பார்க்கவேண்டும். அவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தை எப்படி தனியொரு மனிதர் தலைகீழாக மாற்றத் துணிந்தார்? எப்படி அந்த நேரத்திலேயே, அவர் கொல்லப்படாமல் தப்பித்தார்? என்பதெல்லாம் புதுமையே. இந்தப் புதுமையை எண்ணிப்பார்க்க, தவக்காலத்தின் 3ம் ஞாயிறு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

இன்றும், பல இளையோர், வர்த்தகப் பேரரசுகளை எதிர்க்க துணிவுடன் முன்வருவதற்கு, எருசலேம் கோவிலில் சாட்டையைச் சுழற்றிய இயேசு, ஓர் உந்து சக்தியாக இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.