2018-02-12 16:13:00

நமக்கு விடுதலை வழங்குவதே இயேசுவின் நோக்கம், சட்டங்கள் அல்ல


பிப்.12,2018. 'நீர் விரும்பினால் என்னை குணம்பெறச் செய்யும்' என தொழுநோயாளர் ஒருவர், இயேசுவை நோக்கி கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து, தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகத்தின் வார்த்தைகளை மையமாக வைத்து தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, 'நீர் விரும்பினால்' என கூறப்பட்ட வார்த்தைகள் இயேசுவில் கருணையைத் தூண்டி, அத்தொழுநோயாளரை தொட்டு குணமாக்க உதவின, என்றார்.

தொழு நோயாளரைத் தொடுபவர் தீட்டுப்பட்டவர் ஆவார் என்ற மோசே சட்டத்திற்கு எதிராக, தொடப்பட்டவரால் தொழு நோயாளி சுத்தமானவராக மாறுகிறார்,  எனவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

தொழுநோய் குறித்தோ, சட்டம் குறித்தோ கவலைப்படாத இயேசு, அந்நோயாளருக்கு விடுதலை வழங்கவே ஆவல் கொண்டார் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயால் எவரும் தீட்டுப்பட்டவராக மாறுவதில்லை, மாறாக, தன்னலம், பெருமை, ஊழல் போன்றவைகளலிருந்தே நாம் விடுதலை பெறத் துணிய வேண்டும் என மேலும் கூறினார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.