2018-02-09 15:10:00

பிலிப்பைன்சில் தேசிய விவிலிய நாள்


பிப்.09,2018. பிலிப்பைன்ஸ் நாட்டில், ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தின் கடைசி திங்கள்கிழமையை, தேசிய விவிலிய நாளாக அறிவிக்கும் சட்ட முன்வரைவிற்கு, அந்நாட்டு செனட் அவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டாடி, விவிலியம் பற்றிச் சிந்திப்பதற்கு உதவும் விதத்தில், ஒரு நாள், விடுமுறை நாளாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது என்று, யூக்கா செய்தி கூறுகின்றது.

பிலிப்பைன்ஸ் செனட் அவையின் இந்தத் தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த. அந்நாட்டின் விவிலியப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Arturo Bastes அவர்கள், இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்மானம் என்று கூறினார்.    

மேலும், ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தின் கடைசி வாரத்தை, தேசிய விவிலிய வாரம் என்று, பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள், கடந்த ஆண்டில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.