2018-01-29 16:16:00

துன்புறும் உக்ரைன் மக்களுக்கு அருகாமையில் இருக்கிறேன்


சன.29,2018. உக்ரைன் நாட்டு மக்களுக்காக செபிப்பதாகவும், அவர்கள் அருகாமையில் தான் இருப்பதாகவும், இஞ்ஞாயிறு மாலை, உரோம் நகரின் உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க பசிலிக்காவைச் சந்திக்கச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உரோம் நகரிலுள்ள சாந்தா சோஃபியா பேராலயத்திற்கு சென்று, கீவ் நகர் பேராயர் Svjatoslav Shevchuk அவர்களுடன் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட பின், அப்பேராலயத்தில் குழுமியிருந்த உரோம் நகர் வாழ் உக்ரைன் கத்தோலிக்கருக்கு உரை வழங்கிய திருத்தந்தை, அம்மக்களின் உயரிய எடுத்துக்காட்டுக்களாக கர்தினால் Josyp Slipyi, சலேசிய உக்ரைன் ஆயர் Stepan Chmil, கர்தினால் Lubomyr Husar, ஆகியோரை முன்வைத்தார்.

உக்ரைனில் ஆயுதங்களின் போர் நிறுத்தப்பட வேண்டும் எனவும் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் பெண்குலத்தின் விசுவாசம், உறுதி, மற்றும், பிறரன்பிற்கு தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.

இப்பசிலிக்கா சந்திப்பின்போது, சலேசிய உக்ரைன் ஆயர் Stepan Chmil அவர்களின் கல்லறையையும் தரிசித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஆயரால் தான் சிறுவனாக இருந்தபோது, கற்பிக்கப்பட்டதையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.