2018-01-29 17:18:00

தாழ்மைப்படுத்தப்படாமல் உண்மையான தாழ்ச்சி இல்லை


சன.29,2018. தாழ்மைப்படுத்தப்படாமல், உண்மையான தாழ்ச்சி என்ற ஒன்று இல்லை என இத்திங்கள் காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிலிஸ்தியர்களை வென்றது மட்டுமல்ல, சவுலைக் கொல்வதற்கு இருமுறை கிட்டிய வாய்ப்புக்களையும் மறுத்த உன்னத தாவீது மன்னர், தன் வாழ்வில் பெரும் பாவியாகவும் இருந்தார், இருப்பினும் தன் பாவங்களுக்காக வருந்தி, தன்னையே தாழ்த்தி மன்னிப்பு கேட்டதன் வழியாக, புனிதர் ஆனார், எனவும் கூறிய திருத்தந்தை, தன் மகன் அப்சலோமால் அவமானப்படுத்தப்பட்டாலும், தன் குடிமக்களுக்காக அவற்றைத் தாங்கி, தலைகுனிந்து, வெற்றுக்காலுடன் நடந்தவர் தாவீது என்றார்.

தாவீது அவமானப்படுத்தப்பட்டதை வாசிக்கும் நாம், அவர் ஒலிவ மரங்களுக்கு மேல் உயர்த்தப்பட்டார், என்ற வார்த்தைகளைப் பார்க்கும்போது, அது கிறிஸ்துவைக் குறித்து முன்னுரைக்கப்பட்டதை உணர்கிறோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தாவீதும் இயேசுவும் அவமானப்படுத்தப்பட்டனர், என்றும், இவ்விருவரில், தாவீது, தன் பாவங்களுக்காகவும், இயேசு நம் பாவங்களுக்காகவும், அவமானப்படுத்தப்பட்டனர் என மேலும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.