2018-01-27 15:29:00

மறைசாட்சிகள், இறையடியார்களின் வாழ்வுமுறை ஏற்பு


சன.27,2018. புனித மற்றும் முத்திப்பேறுபெற்ற நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, முத்திப்பேறுபெற்றவர், இறையடியார்கள், மறைசாட்சிகள் ஆகிய 26 பேரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள் மற்றும், அவர்களின் உயரிய வாழ்வுமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட புனிதர்நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம், இவர்கள் பற்றிய விவரங்களைச் சமர்ப்பித்தார். இவர்கள், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இஸ்பெயின் நாடுகளைச் சார்ந்தவர்கள்.

போதகர் சபையைச் சேர்ந்தவரும், Oran ஆயருமான Pietro Claverie அவர்களும், அவரைச் சார்ந்த 18 பேரும், ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், 1994ம் ஆண்டுக்கும், 1996ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொல்லப்பட்டனர்.

ருமேனியா நாட்டைச் சார்ந்த, பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையைச் சார்ந்த பொதுநிலை விசுவாசியான Veronica Antal அவர்கள், அந்நாட்டில் 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி, கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொல்லப்பட்டார்.

இஸ்பெயின் நாட்டில் பிறந்து, அர்ஜென்டீனா நாட்டில் இறந்த, திருஅவையின் திருச்சிலுவை மறைபோதக சகோதரிகள் சபையைத் தொடங்கிய முத்திப்பேறுபெற்ற Nazaria Ignazia March Mesa (சன.10,1889-ஜூலை06,1943) அவர்களின் பரிந்துரையால் ஒரு புதுமை நடைபெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பொதுநிலை விசுவாசியான இறையடியார் Anna-Maria Maddalena Delbrêl அவர்கள், சிறப்பான கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்து, 1964ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி காலமானார்.

இன்னும், இறையடியார்கள் Alfonsa Maria Eppinger, Clelia Merloni, Maria Crocefissa dell'Amore Divino, Ambrosio Grittani ஆகியோரின் பரிந்துரைகளாலும் புதுமைகள் நடந்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.