2018-01-24 15:35:00

புலம்பெயர்ந்தோர் பிரச்சனையில் கிறிஸ்தவர்கள் இணைந்துவர...


சன.24,2018. குடிபெயர்தல் என்ற முக்கியமான ஓர் உலக நிகழ்வில், மனிதர்கள் மீது கொண்டுள்ள மதிப்பு என்ற அடிப்படையில் முடிவுகள் எடுப்பது முக்கியம் என்று, உலக கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் தலைவர், முனைவர் Olav Fykse Tveit அவர்கள் ஐ.நா. அவை கூட்டமொன்றில் உரையாற்றினார்.

பன்னாட்டு செயல்பாடுகளில், மதங்கள் மற்றும் மத நம்பிக்கை கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில் சனவரி 22, இத்திங்களன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில், Tveit அவர்கள், இவ்வாறு உரையாற்றினார்.

குடிபெயர்வோர், மற்றும் புலம்பெயர்வோர் குறித்து, உலகில் நிலவும் சூழல், எதிர்மறையானதாக, இருள் நிறைந்ததாக இருந்தாலும், அதிகமதிகமான மக்கள், இந்தப் பிரச்சனை குறித்து விழிப்புணர்வும் பெற்று வருகின்றனர் என்று Tveit அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

"உமது சித்தம் இவ்வுலகில் நிறைவேற வேண்டும்" என்று செபிக்கும் அனைத்து கிறிஸ்தவர்களும், புலம்பெயர்ந்தோர் பிரச்சனையில் இணைந்து வந்து, இறைவனின் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று உலக கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் தலைவர் Tveit அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.