2018-01-03 16:24:00

கேரளாவில் சிலுவை சேதமாக்கப்பட்டதற்கு எதிராக ஊர்வலம்


சன.03,2018. கேரளாவில், சிலுவை ஒன்று சேதமாக்கப்பட்டதை எதிர்த்து, அம்மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில், ஊர்வலம் மேற்கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் மீது, காவல்துறை நடத்திய அடிதடியில், ஓர் அருள்சகோதரி உட்பட எட்டு ஆர்வலர்கள் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

கேரள இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவையின் கத்தோலிக்க பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த ஊர்வலத்தில், காவல்துறைக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இடையே நடந்த மோதல், கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ அவர்கள் இல்லத்திற்கு அருகில் இச்செவ்வாயன்று இடம்பெற்றுள்ளது.

மலைப்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், சிலுவை ஒன்று சேதமாக்கப்பட்டதை எதிர்த்து நடந்த, இந்த ஊர்வலத்தில், பல அருள்சகோதரிகள், சிறார் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

Bonacaud மலை உச்சியில், குருசுமாலா கிராமத்தில் சிலுவைகள் அழிக்கப்பட்டிருந்ததையொட்டி, உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே, கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே பிரச்சனை வெடித்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.