2018-01-02 15:24:00

புலம்பெயர்ந்த மக்களுக்கு நைஜர் காரித்தாஸ்


டிச.02,2018. நைஜர் நாட்டைக் கடந்து செல்கின்ற மற்றும் அந்நாடு வழியாகத் தாயகம் திரும்புகின்ற புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்குத் தீர்மானித்துள்ளது, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

“பாலநிலத்தின் கதவு” எனப்படும், நைஜர் நாட்டின் Agadez மற்றும், Niamey பகுதியில், இத்தாலிய ஆயர் பேரவையின் உதவியுடன், மூன்று ஆண்டுகளில் இரு மையங்களை அமைத்து புலம்பெயரும் மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவுவதற்கு திட்டமிட்டுள்ளது நைஜர் காரித்தாஸ்.

“பாலநிலத்தின் கதவு” எனப்படும் Agadez நகரம், 11ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை, அல்ஜீரியா, மொராக்கோ, டுனிசியா, லிபியா, மவ்ரித்தானியா போன்ற நாடுகளுக்கும், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளுக்கும், இடையே வர்த்தகம், சுற்றுலா போன்றவை, இடம்பெறுவதற்கு வாயிலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.