2017-12-30 15:38:00

ஜெர்மன் ஆயர்கள் 2018ஐ குடும்பங்களுக்கு அர்ப்பணம்


டிச.30,2017. “நாம் எப்போதும் ஒன்றுசேர்ந்து : திருமண அருளடையாளத்தின் வழியில்”  என்ற தலைப்பில், 2018ம் ஆண்டை குடும்பங்களுக்கு அர்ப்பணித்துள்ளனர், ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்கள்.

திருக்குடும்ப திருவிழா சிறப்பிக்கப்படும் இஞ்ஞாயிறன்று, ஜெர்மனியின் அனைத்து மறைமாவட்டங்கள் மற்றும், பங்குத்தளங்களில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

கிறிஸ்தவ சமூகம், திருமணமான தம்பதியருடன் உடன்நடக்க வேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது அன்பின் மகிழ்வு திருமடலில் கேட்டுக்கொண்டுள்ளதன்பேரில், ஜெர்மன் ஆயர்கள், 2018ம் ஆண்டை குடும்பங்களுக்கு அர்ப்பணித்துள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து, SIR செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த, ஜெர்மன் ஆயர் பேரவையின் குடும்ப பணிக்குழுவின் தலைவரான, பெர்லின் பேராயர் ஹெய்னர் கோக் அவர்கள், மாறிவரும் ஒரு சமுதாயத்தில், திருமணம் பற்றிய திருஅவையின் அதிகாரப்பூர்வப் போதனைகளைக் கடைப்பிடிப்பது, ஒரு சவாலாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.