2017-12-16 16:57:00

திருத்தந்தை, ஈக்குவதோர் குடியரசுத் அரசுத்தலைவர் சந்திப்பு


டிச.16,2017. இச்சனிக்கிழமை காலை, ஈக்குவதோர் குடியரசின் அரசுத்தலைவர், Lenin Moreno Garcés அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற தனிப்பட்டச் சந்திப்பிற்குப்பின்,  அரசுத்தலைவர் Garcés அவர்கள், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும், ஏனைய உயர் அதிகாரிகளையும் சந்தித்து, பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசினார்.

ஈக்குவதோர் நாட்டில் மனிதகுல முன்னேற்றம், சமூக மற்றும் கலாச்சாரத்துறைகள் ஆகியவற்றில், தலத்திருஅவையின் பங்களிப்பு போன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன், அந்நாட்டின் இன்றையச் சூழல்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மேலும், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், "நாம் பிறருக்குப் பணியாற்றும்போது, புனிதமடைகிறோம். அவ்வாறு பணியாற்றும்போது, வரலாற்றில் இறைவனின் படைப்புத் தொழிலை தொடர்கின்றோம்" என்ற சொற்களை பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.