2017-12-09 14:06:00

பாசமுள்ள பார்வையில் - சக்கர நாற்காலி நாயகர்கள்


மின்னஞ்சல் வழியே பகிர்ந்துகொள்ளப்பட்ட இரு குறுங்கதைகள் இதோ:

பளபளப்பான ஓடுகள் பதிக்கப்பட்டத் தரையில் நான் நடந்து சென்றபோது, திடீரென சறுக்கினேன். தடுமாறி விழப்போன என்னை, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவர், தாங்கிப் பிடித்தார். நான் விழுந்திருந்தால், தலையில் பலமாக அடிபட்டிருக்கும். சக்கர நாற்காலியில் இருந்தவர் என்னிடம், ‘நானும் இதேபோல் போன ஆண்டு விழுந்தேன். முதுகுத்தண்டில் பலமாக அடிபட்டதால், இடுப்புக்குக் கீழ் உணர்வற்றுப் போனேன்’ என்று சொன்னார்.

அண்மையில் கால் உடைந்த ஒருவர், தன் புத்தகங்களையும், ஊன்று கோலையும் வைத்துக்கொண்டு சமாளிக்கமுடியாமல் தடுமாறினார். அப்போது, அப்பக்கமாக சக்கர நாற்காலியில் வந்த ஒருவர், புத்தகங்களை வாங்கி, தன் மடியில் வைத்துக்கொண்டு, அவருடன் சென்றார். கால் உடைந்தவரின் இல்லம் வந்ததும், அவரிடம் புத்தகங்களை ஒப்படைத்தபடி, "சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள்" என்று சொல்லி, விடைபெற்றார்.

இந்த சக்கர நாற்காலி நாயகர்களைப்போல், ஆயிரமாயிரம் அன்புள்ளங்கள், தாங்கள் பாதிக்கப்பட்டாலும், அடுத்தவருக்கு உதவிகள் செய்தவண்ணம் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.