2017-12-04 16:28:00

முதியோர் இல்லையெனில் இளையோருக்கு வருங்காலம் இல்லை


டிச.,04,2017. முதியோர் குறித்த மையக் கருத்துடன் இம்மாதத்திற்குரிய செபக் கருத்தை ஒலி-ஒளிச் செய்தியாக இத்திங்களன்று வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தாத்தா, பாட்டிகள்மீது அக்கறை செலுத்தாதவர்களும், அவர்களை சிறப்பான முறையில் நடத்தாதவர்களும், தங்கள் வருங்காலத்தை இழந்தவர்கள் ஆவர், என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, முதியோரின் ஞானத்தை நாம் இழப்பதாலேயே, வருங்காலத்தை இழந்தவர்களாகிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் வாழ்வு அனுபவங்களையும், குடும்ப வரலாற்றையும், மக்கள் மற்றும் சமூக வரலாற்றையும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழங்கவேண்டிய பெரியதொரு கடமையை கொண்டுள்ள முதியோர்களை, நாம் மனதில் வைத்து போற்றுவதன் வழியாக, குடும்பங்களும், அமைப்பு முறைகளும், அவர்களுக்கு உதவவும், அவர்களும், தங்கள் ஞானம், மற்றும், அனுபவத்தின் உதவி கொண்டு, இளைய தலைமுறைக்கு கற்பித்து, ஒத்துழைக்கவும் முடியும் என, தன் டிசம்பர் மாத செபக்கருத்தில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.