2017-11-25 15:33:00

புலம்பெயர்வோருக்கு மத்தியதரைக் கடல் பயணம் ஆபத்தானது


நவ.25,2017. புலம்பெயரும் மக்கள், மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு வருவது, மரணத்தை வருவிக்கும் பயணமாக அமைந்துள்ளது என்று, ஐ.நா. நிறுவன அறிக்கை கூறுகின்றது.

IOM என்ற, ஐ.நா.வின் உலக புலம்பெயர்ந்தோர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாயிரமாம் ஆண்டுக்கும், 2017ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், குறைந்தது 33,761 பேர் இறந்துள்ளனர் மற்றும் காணாமல்போயுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டிற்குச் செல்லும், தூரமும் ஆபத்தும் குறைந்த பாதை மூடப்பட்ட 2016ம் ஆண்டில் மட்டும், மத்தியதரைக் கடல் பயணத்தில் 5,096 பேர் இறந்துள்ளனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

1970ம் ஆண்டிலிருந்து அங்கீகாரமற்ற வழியில், 25 இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், மத்தியதரைக் கடலைக் கடந்துள்ளனர் என்று ஐ.நா. கூறுகிறது.  

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.