2017-11-25 15:51:00

புதியஅரசுத்தலைவர் பதவியேற்பு ஜிம்பாப்வேக்கு வரலாற்று நிகழ்வு


நவ.25,2017. அரசியல் அடக்குமுறைகள், சமூக அநீதி, மனித உரிமைகளின்மை, தொடர் பொருளாதாரச் சரிவு போன்றவைகளை, பல ஆண்டுகளாக அனுபவித்துவந்த ஜிம்பாப்வே மக்கள், தற்போது நாட்டின் மறுபிறப்பை ஒன்றிணைந்து கொண்டாடுகின்றனர் என்று, அந்நாட்டு திருப்பீடத் தூதர் பேராயர், Marek Zalewski அவர்கள் கூறியுள்ளார்.

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயின் ஆட்சியை, இராணுவம் கைப்பற்றிய பின்னர், அந்நாட்டை 37 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசுத்தலைவர் இராபர்ட் முகாபே அவர்கள் பதவி விலகி, இடைக்கால அரசுத்தலைவராக, Emmerson Mnangagwa அவர்கள், இவ்வெள்ளியன்று பதவி ஏற்றுள்ளார்.

இந்நிகழ்வு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, பேராயர் Zalewski அவர்கள், ஜிம்பாப்வே மக்களுக்கும், திருஅவைக்கும், நாடு முழுவதற்கும், இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று தெரிவித்தார்.

மேலும், ஜிம்பாப்வே நாட்டில், இந்த ஆட்சி மாற்றத்தை, மக்கள் அமைதியான வழியில் ஏற்றதற்கு, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். ஆயர்களின் இந்த நன்றி அறிக்கை, இஞ்ஞாயிறன்று எல்லா ஆலயங்களிலும் வாசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.