2017-11-22 15:23:00

ஆசியத் திருத்தூதுப் பயணம் நம்பிக்கையின் பாலத்தை உருவாக்கும்


நவ.22,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், நம்பிக்கையின் பாலத்தை அமைக்கும் என்று, மணிலா கர்தினால், அந்தோனியோ தாக்லே அவர்கள், கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் பற்றி, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் தாக்லே அவர்கள், மியான்மார் மற்றும் பங்களாதேஷ் தலத்திருஅவைகள் சிறியவைகளாக இருந்தாலும், திருத்தந்தை அங்குச் செல்வது, நற்செய்தியின் வழியில், நம்பிக்கைப் பாலத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்று கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற மியான்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு திருத்தந்தை செல்வது மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது என்றும், அரசியல் மற்றும் மனிதாபிமானச் சூழல்களில், மிகவும் இடர்செறிந்த நிலைகாணப்படும் ஆசியாவிற்கு, குறிப்பாக, இவ்விரு நாடுகளுக்கு, இத்திருத்தூதுப் பயணம் முக்கியம் வாய்ந்தது என்றும் கூறினார், கர்தினால் தாக்லே. 

இம்மாதம் 27ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி வரை, மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.