2017-11-21 14:35:00

ஏழைக் குழந்தைகள் குறித்த பாராமுகம் பரவி வருகிறது


நவ.21,2017. உலக குழந்தைகள் தினம் என்பது, நினைவில் வைப்பதற்கான ஒரு நாளாக அல்ல, மாறாக அது மறக்கப்பட வேண்டிய நாளாகக் கருதப்படுகிறது என உரைத்தார் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெஃப்பின் இத்தாலிய பிரிவின் தகவல் தொடர்பு அதிகாரி Andrea Iacomini.

நவம்பர் 20, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலக குழந்தைகள் தினம் குறித்து இத்தாலிய பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ போதிய முக்கியத்துவம் கொடுக்காமல், கொலையாளிகள் குறித்தும், பதவி விலகல் குறித்துமே முக்கியத்துவம் கொடுத்தன என்ற கவலையை வெளியிட்ட Iacomini அவர்கள், ஏழை பெற்றோரின் குழந்தைகள் தங்க இடமில்லால், இந்த குளிர் காலத்திலும் இத்தாலிய பொது வளாகங்களில் விளையாடுவதைக் காணமுடிகின்றது என்றார்.

தங்க இடமின்றி குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வாடுவது, இச்சமூகத்தின் ஆபத்து நிறைந்த பாராமுகத்தைக் காண்பிப்பதாக உள்ளது எனவும் கூறினார் Iacomini.

உரோம் நகரிலும், ஏனைய நகரங்களிலும் தங்க போதிய வசதியின்றி வாடும் குழந்தைகளைக் காண முடிகின்றது என, மேலும் கூறினார் யுனிசெஃப் இத்தாலியப் பிரிவின் தகவல் தொடர்பு அதிகாரி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.