2017-11-09 15:32:00

இலங்கை கத்தோலிக்க காரித்தாஸ் - 50ம் ஆண்டு கொண்டாட்டம்


நவ.09,2017. இலங்கையில் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, தன் பணிகளைத் துவங்கிய 50ம் ஆண்டு கொண்டாட்டம் அண்மையில் கொழும்புவில் நிகழ்ந்தது.

நவம்பர் 7, இச்செவ்வாயன்று, கொழும்பு தேசிய மையத்தில், இலங்கை காரித்தாஸ் அமைப்பின் தலைவரான, கண்டி ஆயர் வியான்னி பெர்னாண்டோ அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியுடன், இந்த பொன்விழா கொண்டாட்டங்கள் துவங்கின என்று ஆசிய செய்தி கூறுகிறது.

பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய பகுதியாக, வறியோர், ஒதுக்கப்பட்டோர் ஆகியோருக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் உருவாகி வருகின்றன என்று, காரித்தாஸ் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் Senthel Sooryakumarry அவர்கள் கூறினார்.

திருஅவையின் சமூக படிப்பினைகளை மனதில் கொண்டு, 1968ம் ஆண்டு, அருள்பணி ஜோ பெர்னாண்டோ அவர்களால் துவக்கப்பட்ட இலங்கை கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, இன்று, அந்நாட்டின் மறை மாவட்டங்களில், 13 மையங்கள் வழியே, உதவிகள் செய்து வருகின்றன என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.