2017-10-17 12:52:00

பாசமுள்ள பார்வையில் – வரவேற்கும் விளக்குகள்


தன் பெற்றோருடன் சண்டைபோட்டு, வீட்டை விட்டுச்சென்ற மகன், சில நாட்கள் சென்று வீட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். "அப்பா, அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். நான் வீட்டுக்குத் திரும்பிவர ஆவலாக இருக்கிறேன். நான் வருகிற ஞாயிறு இரவு 8 மணி அளவில், நம் வீட்டுப் பக்கம் வருவேன். வீட்டின் முன்புறம் உள்ள விளக்கு எரிந்துகொண்டிருந்தால், நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டதற்கு அதை ஓர் அடையாளமாக நான் எடுத்துக்கொள்வேன். விளக்கு எரியவில்லையென்றால்,  என்னை வரவேற்க நீங்கள் தயாராக இல்லை என்பதை புரிந்துகொள்வேன்" என்று மடலில் எழுதியிருந்தார் மகன்.

அடுத்த ஞாயிறு மாலை அவர் வீட்டை நெருங்கும்போது, மனம் பதைபதைத்தது. ஒருவேளை, விளக்கு எரியவில்லையென்றால்... என்று உள்ளம் அஞ்சியது. மகன் தெருவோரம் திரும்பியதும், அவரது கண்கள் ஆச்சரியத்தில் மலர்ந்தன. வீட்டுக்கு முன்புறம் ஒரு விளக்கு மட்டுமல்ல, பல வண்ண விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. Welcome என்ற சொல், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நடுவே வைக்கப்பட்டிருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.