2017-10-17 16:27:00

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு


அக்.17,2017. இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, இம்மக்கள் அடிமைகளைவிட கேவலமாக நடத்தப்பட்ட Manu Smriti காலத்திற்கு நாடு செல்கின்றதோ என்று கவலைப்பட வைக்கின்றது என்று, இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியாவில் தலித் மக்களின் நிலைமை குறித்து, பீதேஸ் செய்தியிடம் பேசிய, Guwahatiன் முன்னாள் பேராயர், தாமஸ் மெனாம்பரம்பில் அவர்கள், இந்துமத புனித நூல்களின் அடிப்படையில், கி.பி. நூறாம் ஆண்டில் இருந்த Manu Smriti என்ற பழங்கால அமைப்புமுறை பற்றியும் கூறினார்.

குஜராத் மாநிலத்தின், ஆனந்த் மாவட்டத்தில், மேல்சாதியைச் சேர்ந்த ஒரு குழுவினரால், 21 வயது நிரம்பிய தலித் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகைகள், இந்த இளைஞர் தலித் என்பதாலே கொல்லப்பட்டார் என்று கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார், பேராயர் மெனாம்பரம்பில்.

காந்திநகர் மாவட்டத்தின், Limbodra கிராமத்தில், கடந்த செப்டம்பர் இறுதியில், இரு தலித்துகள் அடிக்கப்பட்டனர், ஒரு பசுவைக் கொன்றார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, 2016ம் ஆண்டு ஜூலையில், நான்கு தலித்துகள் வாகனத்தில் கட்டப்பட்டு கசையடி கொடுக்கப்பட்டனர்... இவ்வாறு, தலித்துகள் கொடுமைப்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டார், பேராயர் மெனாம்பரம்பில்.

தேர்தல் காலங்களில், தலித்துகளின் வாக்குகளைப் பெறுவதற்காக, பிஜேபி கட்சி பல்வேறு யுக்திகளைக் கையாண்டது, ஆனால் அக்கட்சியை ஆதரிக்கும் இந்து தீவிரவாத அமைப்புகள், தஙகளின் மனப்போக்கை மாற்றாமல், Manu Smriti அமைப்புமுறையை ஊக்குவிக்கின்றன என்று கூறப்படுகின்றது.

ஆதாரம் : REI / Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.