2017-10-14 16:13:00

வத்திக்கானில் ‘ஐரோப்பாவை மீண்டும் சிந்தித்தல்’ கூட்டம்


அக்.14,2017. ஐரோப்பாவை மீண்டும் சிந்தித்தல் என்ற தலைப்பில், இம்மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை, திருஅவைக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையே உயர்மட்ட கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை, திருப்பீடமும், COMECE எனப்படும், EU நாடுகளின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பும் இணைந்து, வத்திக்கானில் நடத்தவுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில், நூற்றுக்கணக்கான, திருஅவையின் உயர்மட்ட அதிகாரிகள், EU ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரதிநிதிகள், அடித்தட்டு மக்கள் மத்தியில் பணியாற்றுகின்றவர்கள் போன்றவர்கள் பங்கு கொள்வார்கள்.

ஐரோப்பியத் திட்டத்தில் எதிர்நோக்கப்படும் அடிப்படை சவால்கள் குறித்த தெளிவான சிந்தனைகளை, இப்பிரதிநிதிகள் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரோம் நகரில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.