2017-10-12 16:51:00

ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் இறக்கும் சிறார்


அக்.12,2017. ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால், உலகில் இறக்கும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், உலகில் ஐந்து வயதுக்குட்டப்பட்ட முப்பது இலட்சம் சிறார், ஒவ்வோர் ஆண்டும் இறக்கின்றனர் என்றும், Save the Children அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு சிறாரைப் பாதித்துள்ளது என்றும், இப்பாதிப்பால், ஒவ்வொரு மணிக்கும், 300 சிறார் வீதம் இறக்கின்றனர் என்றும், Save the Children அமைப்பு கூறியது.

அமெரிக்காவில், ஒரு கோடியே அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார்க்கு, அடுத்தவேளை உணவு எப்போது கிடைக்கும் என்பது நிச்சயமற்று உள்ளது எனவும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறைக்கான காரணங்களில், நோய், வறுமை, மற்றும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவும் உள்ளடங்கும் எனவும், அவ்வறிக்கை கூறுகின்றது.   

உலகில், தடுத்து நிறுத்தக்கூடிய மற்றும் சிகிச்சை வழங்கக்கூடிய நோய்களால், ஏறத்தாழ 59 இலட்சம் சிறார் ஒவ்வோர் ஆண்டும் இறக்கின்றனர். இவர்களில் பத்து இலட்சம் குழந்தைகள், பிறந்த நாளன்றே  இறக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.