2017-09-30 16:49:00

உலக முதியவர் தினம் அக்டோபர் 01


செப்.30,2017. “வருங்காலத்தில் நுழைவது : சமுதாயத்தில் வயது முதிர்ந்தவர்களின் திறமைகள், அவர்களின் பங்கு மற்றும் ஈடுபாடு” என்ற தலைப்பில், அக்டோபர் 01, இஞ்ஞாயிறன்று, உலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

வயது முதிர்ந்தவர்கள், தங்களின் குடும்பங்கள், குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கு வழங்கியுள்ளவை குறித்து சிந்திப்பதற்கு, இந்த உலக நாள் அழைப்பு விடுக்கின்றது.

உலகில் 2015ம் ஆண்டுக்கும், 2030ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை 56 விழுக்காடு அதிகரிக்கும், அதாவது, 90 கோடியே 10 இலட்சத்திலிருந்து, 140 கோடிக்கும் அதிகமாகும் என்று, ஐ.நா. கூறியுள்ளது.

2030ம் ஆண்டுக்குள், அறுபதும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடையவர்களின் எண்ணிக்கை, 15வயதுக்கும், 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் எண்ணிக்கையை விஞ்சிவிடும் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.