2017-09-28 18:17:00

வருங்காலத் தலைமுறையை மனதில் கொண்டு அணு ஆயுதங்களை ஒழிக்க


செப்.,28,2017. உலக வளர்ச்சிக்கும் வருங்கால தலைமுறையினரின் அமைதிக்கும், அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதே முக்கிய தேவை என ஐ.நா. கூட்டத்தில் உரைத்தார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னதித்தோ அவுசா.

அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பது குறித்த அனைத்துலக நாளையொட்டி, ஐ.நா. கூட்டத்தில் கலந்துகொன்ட ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் அவுசா அவரகள், முற்றிலுமான ஆயுத ஒழிப்பு என்பது, அணு ஆயுத ஒழிப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றார்.

இவ்வாண்டு ஜூலை மாதம் முன்மொழியப்பட்டு, இம்மாதம் 20ம் தேதி 150 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம், கடந்த 70 ஆண்டுகளாக உலகம் எதிர்பார்த்துவரும் அமைதிக்கு புது நம்பிக்கையை வழங்கியுள்ளது என்றார்.

அனைத்துலக அமைதி என்பது, நீதி, மனிதகுல முன்னேற்றம்,அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பு, இயற்கை பாதுகாப்பு, பொது வாழ்வில் பங்கேற்பு, மக்களிடையே நம்பிக்கை, நலவாழ்வையும் கல்வியையும் பெறுவதற்கு வாய்ப்பு ஆகியவைகளின் மீது கட்டியெழுப்பப்படவேண்டுமேயொழிய, ஒருவரையொருவர் அச்சுறுத்துவதால் அல்ல, என்ற திருத்தந்தையின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார் பேராயர் அவுசா.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.