2017-09-26 15:43:00

கருக்கலைப்புக்கு எதிராக கிறிஸ்தவ, புத்த, முஸ்லிம் தலைவர்கள்


செப்.26,2017. இலங்கையில் பரவலான சூழல்களில் கருக்கலைப்பை அனுமதிப்பதற்கு அரசு திட்டமிட்டுவரும்வேளை, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள்.

பாலியல் வன்செயலால் கர்ப்பம் தரித்தல் அல்லது, வளரும் கருவின் உருவ அமைப்பின் இயல்பற்றநிலை.. என்ற சூழலில், கருக்கலைப்பை சட்டப்படி அங்கீகரிப்பதற்கு, சட்ட முன்வரைவு ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதை முன்னிட்டு ஒன்றிணைந்து அரசுக்கு விண்ணப்பித்துள்ள, இலங்கையின் கிறிஸ்தவ, புத்த, மற்றும் முஸ்லிம் மதங்களின் தலைவர்கள், கருக்கலைப்புச் சட்டங்களைத் தளர்த்துவதற்குப் பதிலாக, வேறுவிதமான அணுகுமுறைகள் குறித்து அரசு சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், கருக்கலைப்பு செய்வதற்கு,  இலங்கையில், தற்போது அனுமதி உள்ளது.

இலங்கையில், ஒவ்வொரு நாளும் 600 சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.