2017-09-26 15:24:00

கத்தோலிக்க உளவியலாளர்களின் தேசிய கருத்தரங்கு


செப்.26,2017. உளவியலாளர்கள் மக்களின் நல்வாழ்வுக்கு உதவ வேண்டுமென்று வலியுறுத்தினார், மங்களூரு ஆயர் அலாய்சியஸ் பால் டிசூசா.

இந்தியாவின் மங்களூருவில் கடந்த வாரத்தில் நடந்துமுடிந்த கத்தோலிக்க உளவியலாளர்களின் 18வது தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் அலாய்சியஸ் டிசூசா அவர்கள், கத்தோலிக்க உளவியலாளர்கள், இயேசுவைப் பின்பற்றி, உள்ளம் உடைந்துபோன மக்கள், தங்களைப் பற்றி நன்மதிப்பு கொள்வதற்கு உதவ வேண்டுமென்று கூறினார்.

ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி நேர்மறை எண்ணத்தைக் கொண்டிருப்பது, நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியம் என்றும் ஆயர் கூறினார்.

இந்திய கத்தோலிக்க உளவியலாளர்கள் அவையும், கர்நாடக உளவியலாளர்கள் அவையும் இணைந்து நடத்திய இந்த மூன்று நாள் கருத்தரங்கில், ஏறத்தாழ 125  கத்தோலிக்க உளவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : Daiji world/UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.